Wednesday, December 17, 2008

புஷ்ஷை செருப்பால் செருப்பால் அடித்த மாவீரன்!

தோழனே!
எல்லோரும் கவலைப்படுகிறார்கள் புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில் குறி தவறிபோய்விட்டதே என்று...!
தோழனே!
இங்கே பாதணி என்று குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.பாதணியை விட செருப்பில் வீரியம் தெறிப்பதால்..!
தோழனே!
உலகம் முழுவதும் மக்கள் கவலைப்படுகிறார்கள்குறி தவறிப்போய்விட்டதே என்று..!இல்லை.... இல்லை...ஒளிப்படத்தை மீண்டும் பார் புஷ் குனிந்து கொள்ள அமெரிக்க தேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!தோழனே!எனக்கு கூட ஓர் சிந்தனை செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி எடுத்திருந்திருக்கலாமே என்று..!
தோழனே!
நீ ஆயுதத்தால் தாக்கி இருந்தால் கூடஅவன் அன்றே இறந்திருப்பான்.செருப்படியால் அவனை வாழும் பிணமாக அல்லவா மாற்றிவிட்டாய்!
தோழனே!
பத்திரிக்கையாளர்களை தீவிர சோதனை செய்தது ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்றுஆனால், அதை விட அதிக வலிமையுடைய எழுதுகோளையும், நாவையும், செருப்பையும் அல்லவா உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!
தோழனே!
எனக்கும் பாசீஸ மிருகங்களை செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.ஆனால் குறி தப்பாமல் இருக்க இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்! குறி தவறினாலும் பரவாயில்லை உறசிக்கொண்டாவது செல்லுமள்ளவா
தோழனே!
உனக்கொரு செய்திஉன் வீரத்தை இணையத்தில் படித்த போது மற்றொரு செய்தியையும் கண்டேன் நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும் இளைஞர்கள் உன்னைப் போல் என்று செருப்பைத் தூக்குவார்களோ என்ற பெருமூச்சுடன் வந்த சிந்தனையை தவீர்க்க முடியவில்லை.
சோர்ஸ்:
தமிழச்சி15/12/2008
http://www.tamilcircle.net/

No comments: